மங்கையராய் பிறந்திட நல்ல மாதவம் செய்திட வேண்டும்!
1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின் போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும்.
அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது. அதன்படியே மகளிர் தினம் மார்ச் மாதம் 8 ஆம் தேதி பின்பற்றப்பட்டு வருகிறது.
காலங்காலமாக பெண்களை உச்சத்தில் வைக்கிறேன் என்று அவர்களின் சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டு இருக்கிறது, நம் சமூகம்!
சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் தங்கம் என்று கூறி பெண்களை மதிப்பின் உச்சத்தில் வைத்து வைப்பார்கள் அதன்பிறகு அம்மதிப்பு குறையக்கூடாது என்பதற்காக அவர்களை அடக்க, ஒடுக்க முயற்சிகள் மேலெழும்.
மேலும், பெண்களின் நலனுக்காக மதிப்பிற்காக செய்கிறேன் என்று ஒரு பாதையை இவ்வுலகம் பெண்களுக்கு வகுக்க, அப்பாதையானது பெண்களுக்கு அடிமைத்தனத்தையும் பாதை வகுத்தவர்களுக்கு மேன்மைத்தனத்தையும் அளிப்பதாகவே அமைந்துவிடுகிறது. சக உயிர் என்று நினைத்தாலே, இணையான உயிர் என்று நினைத்தாலே வாழ்வு சிறக்கும் என்பது ஆதிக்கருத்து.
மகளிர் தினம் என்பது வெறுமனே ஒரு சிறப்பான நாள் என்று கடந்துப் போகக்கூடிய நாள் இல்லை. இந்நாள், ஒவ்வொரு வருடமும் சென்ற வருடத்தில் இருந்த பெண்களின் நிலையில் தற்போது முன்னேற்றம் அடைந்திருக்கிறதா என்றும் அடைந்திருந்தால் அடுத்த கட்டம் என்னவென்றும், அடையவில்லை என்றால் ஏன் அடையவில்லை என்பதை யோசித்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க அனைவரையும் குறிப்பாக அரசை யோசிக்க செய்யக்கூடிய நாள்.
இன்றைய நாளில் மகளிரை போற்றுதல் எவ்வளவு நிகழ்கிறதோ அதே அளவு அவர்களை சக உயிராக மதித்தலும் நிகழ்தல் வேண்டும்.
மொழி இனம் மதம் என எவற்றின் பெயரினால் அடக்குமுறை நிகழ்ந்தாலும் அது இவ்வுலகுக்கு தேவையற்றதுதான். எப்படி நோக்கினாலும் அனைவரும் சக உயிர்கள் தான்!
அனைவருக்கும் வாழ்வு உண்டு! அனைவரும் வாழ்வோம்!!!
உங்களுக்கான வாழ்த்துகள் சில,
* உங்கள் வெற்றியை பதியவும், கூட்டத்தில் தனித்து நிற்கவும், யாரிடமிருந்தும் அனுமதி கேட்கத் தேவையில்லை, நீங்கள் சிறந்தவர் என்று உங்களுக்கே தெரியும், மகளிர் தின வாழ்த்துகள்
* இந்த நாள் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளையும் பாராட்டுகளையும் தரட்டும். இனிய மகளிர் தின வாழ்த்துகள்!
* உங்கள் நம்பிக்கை பெருகட்டும், உங்கள் வசீகரம் மகிமையில் ஒளிரட்டும்! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
* எப்போதும் வழித்துணையாக உடன் வரும் உங்கள் அன்பை, அற்பணிப்பை இன்று நினைத்து பெருமை கொள்கிறோம், இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
* இந்த மகளிர் தினத்தில், வலிமையான, இரக்கமுள்ள, கடின உழைப்பாளி என்ற வகையில் உங்கள் சிறந்த சாதனைகளைப் பாராட்ட நேரம் ஒதுக்க வேண்டியது என் கடமை. இனிய மகளிர் தின வாழ்த்துகள்!
* ஒரு பெண் திமிராக இருப்பதற்கு அவளின் ஒழுக்கமும், நேர்மையான அன்பான குணமுமே காரணம்! இனிய மகளிர் தின வாழ்த்துகள்!
* பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள் உருகவும் தெரியும், உருக்கவும் தெரியும்! இனிய மகளிர் தின வாழ்த்துகள்
* இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பையும், பாசத்தையும் பரப்பும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்
* பெண்கள் இல்லாத உலகில் அன்பு நிலைத்திருப்பதில்லை! அன்பு இல்லா உலகில் மனிதன் வாழ்ந்திருப்பதில்லை!!!