10 வருடங்களுக்கு முன் நா இப்படி இல்லை.. விவாகரத்து குறித்து வாயை திறந்த டிடி - கலங்க வைத்த பதிவு!
பிரபல தொகுப்பாளர் டிடி திருமணம் குறித்து முதல் முறையாக கேமராவின் முன் பேசியுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி.
இவரின் தொகுப்பாளர் பயணத்தை 20 வருடங்களாக தொடர்ந்து வருகிறார். இவரின் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைத்தது.
தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தொகுப்பாளினி பயணத்தை நிறுத்தி விட்டு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
திருமண வாழ்க்கை குறித்து பேசும் டிடி
இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் பிரபல தொலைக்காட்சியொன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், “ 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் என்பதனை நான் தவறாக புரிந்து வைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறாக இருக்கின்றது. அத்துடன் திருமணம் செய்து கொண்டால் தான் வாழ்க்கை முழுமையடையும் என்பது உண்மையல்ல.
திருமணம் செய்து கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. எனவே திருமணம் செய்து கொண்டு தான் வாழ வேண்டும் என்பது எல்லாம் கிடையாது..” என உருக்கமாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |