இரண்டாவது திருமணத்திற்கு ஓகே சொன்ன டிடி? மாப்பிள்ளை யார்?
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வரும் டிடி என்ற திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆல்டைம் பேவரைட் டிடி
20 ஆண்டுகளை கடந்து முன்னணி தொகுப்பாளினியாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் டிடி.
1999ம் ஆண்டு தொடங்கிய இந்த பயணம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பள்ளி செல்லும் போதே தொகுப்பாளர் வேலையையும் தொடர்ந்து வந்த டிடி, பலருக்கும் பேவரைட் என்றால் அது மிகையாகாது.
இவரை பார்த்து பலரும் தொகுப்பாளர் வேலைக்கு வந்தனர் என்றே கூறலாம்.
அந்த அளவுக்கு தன்னுடைய வேலையை ரசித்து செய்தவர், தொகுப்பாளர் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் மற்றும் பெரிய திரையிலும் கால் பதித்தார்.
சமீபத்தில் வெளியான காபி வித் காதல் படத்திலும் நடித்திருந்தார்.
தோல்வியில் முடிந்த முதல் திருமணம்
டிடி கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால நண்பரும், உதவி இயக்குனருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சில மாதங்களில் இவர்களது திருமணம் கசந்து போக, கருத்து வேறுபாடினால் 2017ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்.
தற்போது ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
விவாகரத்துக்கு பின்னர் தன்னுடைய வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்கினார் டிடி.
இரண்டாவது திருமணம்
இந்நிலையில் தற்போது டிடி இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபராக இருக்கலாம் என கூறப்படுகிறது, இது வதந்தியாக கூட இருக்கலாம் என பேசப்படுகிறது.
ஆனாலும் டிடி தரப்பில் இருந்து எந்தவிதமான உறுதியாக தகவலும் வெளியிடப்படவில்லை.
ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் டிடிக்கு ஏற்ற மணமகனாக இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.