மகளுடன் நடனமாடிய போது சுருண்டு விழுந்த அர்ச்சனா: ரசிகர்களின் சரமாரியான அட்வைஸ்
தொகுப்பாளினி அர்ச்சனாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார்.
மேலும் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் இவருக்கு திடீரென மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால் தற்போது வரை ஓய்வில் இருந்து வரும், இவரின் 16 தையல் போடப்பட்டுள்ளது. இனிமேல் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதால் அர்ச்சனா தொகுப்பாளினியாக பயணத்தை தொடர முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய தங்கை மற்றும் மகளுடன் சேர்ந்து நடனம் ஆடியபோது திடீரென தலையில் வலி ஏற்பட கொண்டு விடுகிறார். இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் பலரும் முதலில் ஓய்வெடுத்து உடலைத் தேற்றிய பின்பு நடனம் எல்லாம் ஆடலாம் என அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
