குழந்தை பருவத்தில் அனுபவித்த வலி... மகனின் வார்த்தையால் கண்ணீர் விட்டு அழுத முகேஷ் அம்பானி
திருமண நிகழ்வில் ஆனந்த் அம்பானி பேசிய வார்த்தைகளைக் கேட்டு முகேஷ் அம்பானி கண்ணீர் விட்டு அழுதுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் தான் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கொண்டாட்டம் அரங்கேறி வருகின்றது.
நேற்று முதல் திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கோலாகலமாகத் தொடங்கியுள்ள நிலையில், உலகின் பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மணமகனான ஆனந்த் அம்பானி தனது பெற்றோர் மற்றும் குழந்தைப் பருவத்தைப் பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கண்ணீர் விட்ட முகேஷ் அம்பானி
ஆனந்த் அம்பானி பேசுகையில், தனது குழந்தை பருவம் மலர்களின் படுக்கையல்ல.... முட்களின் வலியை தான் நான் அனுபவித்துள்ளேன்... தனது உடம்பில பல பிரச்சினை எதிர்கொண்ட தனக்கு அம்மாவும், அப்பாவும் ஆதரவாக நின்றார்கள் என்று பேசினார்.
ஆனந்த் அம்பானியின் இந்த பேச்சைக் கேட்டு முகேஷ் அம்பானி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.
மேலும் தனது திருமண ஏற்பாடுகளை செய்வதற்கு குடும்பத்தினர் கடுமையாக வேலை செய்தனர்... தினமும் 3 மணி நேரம் மட்டுமே தூங்கினர்... அனைவருக்கும் நன்றி என்று கூறி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |