விக்னேஷ் சிவனை பிரிகின்றாரா நயன்தாரா? இன்ஸ்டாகிராமில் பதிவால் குழப்பம்
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதிவு காதல் கணவரை பிரிகின்றாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.
இந்த தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ள நிலையில், அவ்வப்போது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ள பதிவில், "எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் UnFollow செய்துள்ளார். நயன்தாராவின் இந்த செயலால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
ஆனால் விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அப்படியே தான் இருக்கின்றது. கடந்த நாட்களில் வந்த காதலர் தினத்தில் கூட விக்னேஷ், நயன்தாராவை நினைத்து பதிவு ஒன்றினையும், ரோஜா பூக்கள் பரிசாக கொடுப்பதையும் புகைப்படம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |