5 ரூபாய் கொத்தமல்லி இலைக்கு 68 ரூபாய் செலவா? அரங்கத்தில் புலம்பும் கணவர்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சிக்கனத்தின் சிகரமான கணவன் மற்றும் சிக்கி தவிக்கும் மனைவி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் சிக்கனத்தின் சிகரமான கணவன் மற்றும் சிக்கி தவிக்கும் மனைவி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் மனைவி ஒருவர் செய்துள்ள காரியம் மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆம் 5 ரூபாய் மல்லி இலை வாங்குவதற்கு 68 ரூபாய் செலவு செய்து ஆன்லைனில் வாங்கியுள்ளார்.
இதற்கு குறித்த பெண் கூறும் காரணம் மாடியிலிருந்து கீழே இறங்கி வாங்குவதற்கு பதில், ஆர்டர் கொடுத்தால் வீட்டிற்கே கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள் என்கின்றார்.
இன்று ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வந்தாலும், இதுபோன்ற காரணத்திற்காக பணத்தை வீணாக விரயமாக்குவது என்று ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |