படு பயங்கரமாக மாறிய எமிசாக்சன்... லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்த்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
தமிழில் மதராசபட்டினம் படத்தில் நடித்து பிரபல்யமான எமி ஜாக்சன் நேற்று வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பல விமர்சனங்களோடு வைரலாகி வருகின்றது.
நடிகை எமி ஜாக்சன்
தமிழ் சினிமா 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான்.நடிகை எமி ஜாக்சன்.
தான் நடித்த முதல் திரைப்படமே ஒட்டு மொத்த ரசிகர்களை ஈர்க்கவே தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, தனுஷுடன் தங்க மகன், உதயநிதி ஸ்டாலினுடன் கெத்து, விஜய்யுடன் தெறி , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.0 போன்ற உச்ச நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
மேலும், இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகமல் குழந்தை
இந்நிலையில், தனது காதலருடன் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்து அந்தக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.
குழந்தைப் பெற்றப் பின் திருமணம் செய்துக் கொள்ள இருந்த இந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். முதல் காதல் தோல்வியானதால் தற்போது எட் வெஸ்ட்விக் என்கிற நடிகரை காதலித்து வருகிறார்
அவருடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களையும் அவர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்ற வேளையில், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பல விமர்சனங்களோடு வைரலாகி வருகின்றது.
அந்தப் புகைப்படத்தில் தனது ஹேர்ஸ்டைலையும் முகத்தையும் மொத்தமாக மாற்றி ஆண் போல் தோற்றமளிக்கிறார். இந்தப் புகைப்படங்களுக்கு நல்லா இருந்த மண்டைய ஏன் இப்படி குதறி வச்சிருக்காங்க.. அழகாதனே இருந்தீங்க என பல கமெண்டுகளால் திட்டி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |