குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் என்னவாகும்? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இவற்றினை குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாமா என்பதை தெரிந்து கொள்வோம்.
நெல்லிக்காய்
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் நெல்லிக்காய் அதிகமான சத்துக்களையும் கொண்டுள்ளது. ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ள நெல்லிக்காய், நுரையீரல் பாதிப்புகளை சரி செய்வதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
குளிர்காலத்தில் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவது உங்களை ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவும்.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் நன்மைகள் :
குளிர் காலங்களில் மாரடைப்பு அபாயம் அதிகரிப்பதுடன், உயர் ரத்த அழுத்தம், சுவாச பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது. நெல்லிக்காய் இந்த பிரச்சினைகளை சரிசெய்கின்றது. கல்லீரல் பாதிப்பையும் தடுக்கின்றது.
திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி காணப்படுகின்றது. ஆனால் எந்தவொரு பழங்களிலும் இல்லாத அளவிற்கு நெல்லிக்காயில் அதிகம் உள்ளது. ஒரு சிறிய நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி காணப்படுகின்றது.
ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடலாம்?
நெல்லிக்காயை ஆண்டு முழுவதும் மிட்டாய் அல்லது ஊறுகாயாக மாற்றி வைத்துக்கொண்டு சாப்பிடலாம். அதிகபட்ச நன்மைக்காக தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.
நீங்கள் தினமும் காலையில் 1-2 நெல்லிக்காய்களை சாப்பிடலாம். வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதால் ஒரு நாளைக்கு 2-க்கு மேல் சாப்பிட வேண்டாம்.
மேலும், நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் நெல்லிக்காய் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் இதனை வெட்டி சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடலாம். அல்லது உப்பு சேர்த்து நெல்லிக்காய்களை வேக வைத்தும் சாப்பிடலாம்.
ஆனால் கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், அறுவை சிகிச்சை செய்த நபர்கள் மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |