அபிஷேக் பச்சனை பிரிந்து அம்மா வீட்டிற்கு சென்ற ஐஸ்வர்யா ராய்... போட்ட கண்டிஷன் என்ன?
நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனைப் பிரிந்து அவரது தாய் வீட்டில் வசிப்பதாக பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய்
உலக அழகி என்ற பட்டத்தை பெற்றதுடன், இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழ் சினிமாவைத் தொடர்ந்து பாலிவுட்டில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் இவர், அங்கு உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார்.
தமிழில் அவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், பொன்னியின் செல்வன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்பு சல்மான் கானுடனான காதல் தோல்விக்கு பின்பு அபிஷேக் பச்சனைக் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதுடன் இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார்.
இந்த தம்பதிக்குள் சமீப காலமாக பிரச்சினை என்றும் இருவரும் ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை... விவாகரத்து வரை இவர்களின் பிரச்சினை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் மகளின் பள்ளி ஆண்டுவிழாவிற்கு குடும்பமாக வந்து இருவரும் கலந்து கொண்டுவிட்டு சென்றனர். ஆனால் இவை உண்மையல்ல என்று பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அதாவது அனைவரது வீட்டில் இருப்பது போன்று மாமியார் மருமகள் பிரச்சினை என்றும் அதனால் தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், செல்லும் முன்பு அபிஷேக் பச்சனிடம் நான் முக்கியமா இல்லை அல்லது உனது அம்மா முக்கியமா என்ற கேள்வியை முன்வைத்ததாகவும், இதனால் அபிஷேக் பச்சன் தனியாக வீடு பார்ப்பதற்கு யோசனை செய்து வருவதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |