வீட்டில் சூடான சாப்பாடு இருக்கா? அப்போ இந்த காயில் செய்த கார சட்னி போதும்
இந்தியாவில் பெண்கள் பல்வேறு வகையான சட்னிகளை தினசரி சமையலில் செய்வது வழக்கம். ஆனால், அவை அனைத்திலும் இந்த நெல்லிக்காய் சட்னி தான் உண்மையான சத்தும், ருசியும் கொண்டது என நீங்களே செய்து பார்த்தபின் உணர்வீர்கள்.
நெல்லிக்காய் என்பது பல வகையான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு அதிசய பழம். ஆனால், இந்த நெல்லிக்காயில் இருந்து செய்யப்படும் காரமான சட்னி நமக்கு எத்தனை ஊட்டச்சத்து நன்மைகளை தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?.
அந்த வகையில் சுவையும் சத்தும் நிறைந்த நெல்லிக்காய் சட்னியை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை கொத்தமல்லி - 100 கிராம்
- நெல்லிக்காய் - 100 கிராம்
- கருமிளகு - 10
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- சீரகம் - 1 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- பச்சை மிளகாய் - 4
செய்யும் முறை
நெல்லிக்காய், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். நெல்லிக்காயின் நடுவிலுள்ள விதையை எடுத்து, சிறு துண்டுகளாக வெட்டவும். கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கவும்.
(தண்டுகளை நீக்கிவிட வேண்டும் – இது அரைக்க சுலபம்)மிக்சி ஜாரில் வெட்டிய நெல்லிக்காய் துண்டுகள், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
அதனுடன் சீரகம், கருமிளகு, பெருங்காயம், மற்றும் உப்பு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.மிக்ஸியில் நன்கு மென்மையாக அரைக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் மேலும் சேர்க்கலாம். சட்னி சரியான பதத்திற்கு வந்ததும் மிக்சியிலிருந்து எடுத்துக் கொள்ளவும்.சட்னியை ஒரு சுத்தமான கிண்ணத்தில் எடுத்துவைத்து பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |