பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும் சம்பந்தி.. அப்பளம் போட்டு செய்வது எப்படி?
பொதுவாக காலையில் தோசைக்கு, சப்பாத்திக்கு சம்பந்தி அரைத்தால் நன்றாக இருக்கும்.
இப்படி செய்யும் பொழுது தினமும் ஒரே வகையான சம்பந்தி செய்யாமல் தினமும் வெவ்வேறு வகையில் செய்தால் வீட்டிலுள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
அப்படியாயின், வீட்டில் அப்பளம் இருந்தால், அதனை பொறித்து போட்டு அப்பளம் சம்மந்தி செய்யலாம்.
இந்த சுவையை வீட்டிலுள்ளவர்கள் பிடித்து விட்டால் உங்களுக்கு வேலையும் குறைவு, அதே சமயம் சுவையும் சாப்பிட சாப்பிட ஆசையாகவே இருக்கும்.
கேரளாவில் பிரபலமான இந்த சம்மந்தி, அப்பளத்தை வறுத்தோ அல்லது பொரித்தோ சேர்க்கலாம்.
அந்த வகையில், அப்பளம் சம்பந்தி எப்படி அரைக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அப்பளம்- 3 பெரியது
- பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை
- தேங்காய் துருவல்
செய்முறை
தேவையான அளவு அப்பளங்களை எடுத்து, எண்ணெய் அல்லது நெயால் பொறித்து தனியாக நொறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸி ஜாரில், உடைத்த அப்பளங்கள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த சம்மந்தியை ஒரு கிண்ணத்தில் எடுத்து சூடான சாதத்துடன் கொஞ்சமாக நெய் ஊற்றி பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |