ஆபாச உடையில் ராஷ்மிகா; சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிய சூப்பர் ஸ்டார்
ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமிதாப் பச்சன் வலியுறுத்தியுள்ளார்.
ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சமீபத்தில் செய்திகளில் இடம்பிடித்தது. அந்த வீடியோவில் நடிகை கறுப்பு நிற ஆடை அணிந்து லிப்டில் ஏறுவதைப்போல் காட்டப்பட்டிருந்தது.
AI டெக்னாலஜி
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு நல்ல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறதோ, அதேவேளையில் அதில் ஆபத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.
சமீப காலமாக டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி. இதைப் பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை ஈஸியாக மற்றொருவரின் முகத்தை வைத்து மார்பிங் செய்ய கூடிய வசதி காணப்படுகின்றது.
அந்த டெக்னாலஜியின் ஆபத்தை உணர்த்தும் ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி இருக்கிறது. அதன்படி நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் உண்மையில் இது AI தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவாகும். இந்த வீடியோ வைரலான நிலையில், இதனை பார்த்து ஷாக் ஆன பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், இதனை மார்பிங் செய்து வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |