நீண்ட இடைவெளிக்கு பின் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்த ஸ்ரீதிவ்யா : வைரல் புகைப்படங்கள்
கோலிவுட் திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதிவ்யா. 6 ஆண்டுகளுக்கு பின் இவர் நடித்துள்ள ராய்டு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை ஸ்ரீதிவ்யா
தெலங்கானாவில் பிறந்து வளர்ந்து தமிழ் படங்கள் மூலம் பிரபலமானவர், ஸ்ரீதிவ்யா. இவர், மூன்று வயதிலேயே நடிக்க வந்தவர். குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு வெளியான‘மனசாரா’எனும் தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் நடித்த இவர், தமிழில் 2013ஆம் ஆண்டு வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
பின்னர் அதர்வாவுக்கு ஜோடியாக ஈட்டி, ராணா டகுபதிக்கு ஜோடியாக பெங்களூரு நாட்கள், ஜிவி பிரகாஷ் உடன் பென்சில், விஷாலுக்கு ஜோடியாக மருது, விஷ்ணு விஷாலுடன் மாவீரன் கிட்டு என ஒரே ஆண்டில் அரை டஜன் படங்களில் நடித்து செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வந்தார் ஸ்ரீதிவ்யா. இதற்கு அடுத்த ஆண்டு அட்லீ தயாரித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆன அப்படத்தோடு அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது ரெய்டு படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ரெய்டு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யா, சேலையில் செம்ம அழகாக போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |