காதலரை கரம்பிடித்த அமலாபால்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை அமலாபால் தனது காதலர் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை அமலாபால்
மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார்.
விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா படத்தின் மூலம் இவர்கள் காதல் மலர்ந்துள்ளது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு பிரிந்து விவாகரத்து பெற்றார்.
பின்பு தனக்கு விருப்பமான இடத்திற்கு சென்று பொழுதை கழித்து வந்த அவர், சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது இவரது நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் காதலை வெளிப்படுத்தினார்.
இவர் கோவாசை சேர்ந்தவர் என்றும் Scilla Villas என்ற நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியாக உள்ளாராம்.
இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் பிரபல தனியார் ரெசார்ட்டில் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஜகத் தேசாய் தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டு, 'இரண்டு ஆன்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகப் பெண்ணுடன் இந்த வாழ்நாள் முழுவதும் கைகோர்த்து நடப்பேன்...' என பதிவிட்டுள்ளார்.
அமலாபால் கூறுகையில், 'எங்களை ஒன்றிணைத்த அன்பையும் அருளையும் கொண்டாடுகிறோம்..... என் தெய்வீக ஆண்மையுடன் திருமணம் செய்துகொண்டேன்... உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன்..' என்று பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |