அம்பானியின் மாளிகையை பராமரிக்கும் 600 பணியாளர்கள்: அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அம்பானியின் வீட்டைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஆடம்பரமான வீடு
உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக குறிப்பிடப்படுவது முகேஷ் அம்பானியின் வீடுதான்.
இந்த வீட்டின் தோற்றமும் மதிப்பும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்த இடத்தில் உள்ளது. அம்பானியின் வீடானது மும்பையில் 4 இலட்சம் சதுர அடியில் 27 மாடிகளைக் கொண்ட அன்டிலியா வீடாகும்.
இந்த மாளிகை 8.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் வந்தாலும் அசையாமல் தூண் போல நிற்கும் வகையில் பல தொழிநுட்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டின் பதிப்பானது அம்பானியின் 6,000 கோடி முதல் 12,000 கோடி வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த வீட்டில் ஸ்பா, சலூன், மூன்று நீச்சல் குளங்கள், யோகா மற்றும் நடன ஸ்டுடியோக்கள் என பல வசதிகளைக் கொண்டிருக்கிறது.
இந்தவீட்டை பராமரிப்பதற்கு மட்டும் 600 பணியாளர்கள் கொண்ட குழு ஒன்று இருப்பதாகவும் அவர்களுக்கு 2 இலட்சம் சம்பளம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த வீட்டில் 168கார்களை நிறுத்துவதற்கு இடம் இருப்பதாகவும் 3 ஹெலி பேட்கள் உள்ளதாகவும் இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கு 2 வருடங்கள் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாளிகைப் போன்ற வீட்டை புகழ்பெற்ற சிகாகோவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களான பெர்கின்ஸ், வில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான லெய்டன் ஹோல்டிங்ஸ் ஆகியோர் தான் இந்தக் கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர்.