15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா- அம்பானி குடும்பம் கடைசி மாடியில் இருக்க என்ன காரணம்?
இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தராக முகேஷ் அம்பானி பார்க்கப்படுகிறார்.
இவரின் வீடு ஆன்டிலியா தான் இந்தியாவில் இருக்கும் மிக விலையுயர்ந்த தனியார் குடியிருப்புகளில் ஒன்றாக இருக்கின்றது. இந்த வீடு இந்தியாவில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது.
முகேஷ் அம்பானியின் ஆடம்பரமான மாளிகையில் , நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட், ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தா, பிருத்வி, வேதா அம்பானி உள்ளிட்ட அம்பானியின் மொத்த குடும்பமும் இருக்கிறார்கள்.
அதுவும், 27 மாடிகள் கொண்ட ஆண்ட்லியாவின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு 15000 கோடி இருக்கும். பெர்கின்ஸ் & வில் மற்றும் ஹிர்ஷ் பெட்னர் அசோசியேட்ஸ் ஆகிய இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை மேற்பார்வை செய்துள்ளன.
அந்த வகையில், இவ்வளவு பிரமாண்டமான வீட்டில் அம்பானி குடும்பம் கடைசி மாடி தான் வசிக்கிறார்களாம். இதற்கான காரணத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
27 ஆவது மாடியில் குடியேற என்ன காரணம்?
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பாண்டம் தீவின் பெயரை அடிப்படையாக வைத்து பெயரிடப்பட்ட ஆண்டிலியாவில் 3 ஹெலிபேடுகள், அடுக்கு கார் பார்க்கிங், 9 அதிவேக லிஃப்ட் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு உடைகள் உள்ளிட்ட பல விஷேட அம்சங்கள் உள்ளன.
15000 கோடி செலவில் கட்டிய வீட்டில் அம்பானி குடும்பத்தினர் 25 மாடிகளை தவிர்த்து 27வது மாடியில் வசிக்கிறார்கள்.
இது குறித்து நீதா அம்பானி கூறுகையில், “ 27-வது தளத்தில் தான் அற்புதமான காற்றோட்ட அமைப்பு மற்றும் இயற்கை சூரிய ஒளியை பெறலாம். இங்கு வருவதற்கு பெரிதாக யாருக்கும் அனுமதியில்லை.” எனக் கூறியுள்ளார். இதன் காரணமாக தான் குடும்பத்தினர் 27 மாடியில் வசிக்கிறார்கள்.
விஷேட அம்சங்கள்
1. ஆடம்பரம் மற்றும் வெளிப்புற தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
2. ஆண்டிலியா ரிக்டர் அளவுகோலில் 8.0 வரை சக்திவாய்ந்த எந்த விதமான நிலநடுக்கத்திலும் இருந்து தப்பிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. தொழில்நுட்ப உதவியால் சிறந்த பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
4. ஆடம்பர குடியிருப்பில் 49 படுக்கையறைகள், ஒரு பெரிய பால்ரூம், ஒரு அதிநவீன ஹெல்த் ஸ்பா மற்றும் பல நீச்சல் குளங்கள் உள்ளன.
5. மும்பையின் வெப்பமான வானிலையிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில். தனித்துவமான குளிர்ச்சியை வழங்கும் பனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
6. 600 க்கும் மேற்பட்ட பணியளர்கள் இந்த வீட்டில் வேலை செய்கிறார்கள் மற்றும் ஆன்டிலியாவின் ஒவ்வொரு பகுதியும் சீராக இயங்குவதை உறுதி செய்வது அவர்களின் கடமையாக பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |