100% சார்ஜ் ஆன பின்பும் மொபைல் சார்ஜிங்கில் இருக்கின்றதா? இனி அந்த தவறை செய்யாதீங்க
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களை 100 சதவீதத்திற்கும் மேல் சார்ஜ் செய்தால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட் போன்
இன்றைய காலத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் உள்ளது.
பேசுவதற்கு மற்றும் தகவல் தொடர்புக்காக என்று இருந்த போன்கள் தற்போது ஒரு நபரின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.
ஆம் பணப்பரிமாற்றம் தொடங்கி சாப்பாடு ஆர்டர் கொடுக்கும் நிலை என்று வளர்ந்து கொண்டே செல்கின்றது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் அதிக நேரம் சார்ஜிங்கில் இருந்தால் என்ன ஆகும்? என்ற கேள்வி பெரும்பாலான நபர்களுக்கு எழுந்திருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
100 சதவீதத்திற்கு மேல் சார்ஜ்
பெரும்பாலான நபர்கள் போனை எப்பொழுதும் 100 சதவீத சார்ஜிங்கில் தான் வைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்படி மட்டுமின்றி சார்ஜ் போட்ட போனை 100 சதவீதம் சார்ஜ் ஏறிய பின்பும் நீண்ட நேரம் அப்படியே வைத்து விடுகின்றனர்.
இவை பேட்டரியில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது அநேக பேருக்கு தெரியவில்லை. ஓவர் சார்ஜிங் செய்வது பேட்டரியில் உடனடியான தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் பேட்டரியின் ஆயுளை குறைத்துவிடுமாம்.
சார்ஜ் ஏறிய பின்பு மீண்டும் வைத்திருந்தால் போன் சூடாகும். ஒவ்வொரு முறையும் உங்கள் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட்டு, அதை டிஸ்சார்ஜ் செய்யும்போது, அது ஒரு பேட்டரி சுழற்சி எனப்படுகிறது. அதிகப்படியான பேட்டரி சுழற்சிகள் பேட்டரி திறனைக் குறைக்கலாம்.
ஸ்மார்ட்போன் பேட்டரியில் சார்ஜ் 20 சதவீதத்திற்கு வந்துவிட்டால் சார்ஜ் செய்ய வேண்டும். அதுவே 80 சதவீதம் சார்ஜ் ஏறிவிட்டால் அதனை சார்ஜ் செய்வதில் இருந்து எடுத்துவிட வேண்டும்.
வெப்பமான இடத்தில் வைத்து ஃபோனை சார்ஜ் செய்யதோ அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் சார்ஜ் செய்வதோ கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |