86 வயதில் உலகை விட்டு பிரிந்த ரத்தன் டாடா- கடைசியாக வெளியிட்ட Twitter post
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா சற்றுமுன்னர் காலமானார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ரத்தன் டாட்டா காலமானார்
86 வயதாகும் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானார்.
இவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி , “ தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர்" என குறிப்பிட்டுள்ளார்.
86 வயதான ரத்தன் டாடா கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடலநலம் குறைவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Thank you for thinking of me 🤍 pic.twitter.com/MICi6zVH99
— Ratan N. Tata (@RNTata2000) October 7, 2024
ரத்தன் டாடா வெளியிட்ட அறிக்கை
இது குறித்து அறிக்கை வெளியிட்ட ரத்தன் டாடா, “ தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருகின்றது. கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன்.. வயது மற்றும் உடல்நிலை சார்ந்த வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன்..” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, தீவிர சிகிச்சை பிரிவான ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியன.
இந்த நிலையில் தற்போது இறப்பு செய்தி வெளியாகி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன், இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |