தினசரி ஒரு கொய்யா சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள்! என்னென்ன தெரியுமா?
பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
விலையுயர்ந்த பழங்களை விடவும் எல்லா காலங்களிலும் மலிவான விலையிலேயே கிடைக்கக்கூடிய கொய்யாவில் அதிகளவில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றது.

தினசரி ஒரு கொய்யா சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் குறித்து இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் ஷுபம் வாட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொய்யாவின் ஆரோக்கிய நன்மைகள்
அது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் காலநிலை மாறும்போது தொற்று நோய்க் கிருமிகளால் உடலில் உண்டாகும் நோய்களை எதிர்த்து போராட உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கின்றது.

கொய்யா குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவு என்பதால் இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.
கொய்யா குறைந்த கலோரி அளவு கொண்ட மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழம் என்பதால், செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கும். மேலும் இதில் நார்ச் சத்துக்கள் அதிகம் என்பதால், நீண்ட நேரம் பசி உணர்வு உண்டாகாது.
அதனால் உட்கொள்ளும் உணவின் அளவை குறைக்க உதவும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க போராடுபவர்களுக்கு கொய்யா ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் கொய்யாப்பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது. மேலும் இது தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் நெஞ்செரிச்சலைக் குறைக்க உதவுகிறது.
அதோடு இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால், இது செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. இரத்த அழுத்தம் தற்போது இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடும் போது, அதில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்எனவே பிபி உள்ளவர்கள் தினமும் கொய்யா சாப்பிடுவது நல்லது.

சர்க்கரை நோய் கொய்யாப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது.இது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
இதய ஆரோக்கியம் இதயத்திற்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதம் என்று டாக்டர் கூறுகிறார். ஏனெனில் இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்தக்குழாய்களில் கொழுப்புகள் படிவதைத் தடுப்பதோடு, கெட்ட கொழுப்புக்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
அதுவும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆகவே இதயம் தொடர்பான நோய்கள் வரக்கூடாதெனில் கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிடுவது பெரிதும் துணைப்புரியும் என இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் ஷுபம் அறிவுறுத்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |