வலி நிவாரணி முதல் ஞயாபக சக்தி வரை.., வெற்றிலையில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
கடவுளுக்கு படைப்பதற்கும், பெரியவர்களுக்கு மரியாதையாக வழங்குவதற்கும் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.
வெற்றிலை வெப்பமான பகுதிகளிலும் சதுப்பு நிலங்களிலும் வளரும் ஒரு கொடி வகை தாவரமாகும்.
இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
அந்தவகையில், வெற்றிலையை சாப்பிடுவதால் உடலிற்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
நரம்புகளுக்கு பலம்- 2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு பலம் கிடைக்கும். மேலும், உடலுக்கு வெப்பம் தருவதுடன், வாய்நாற்றத்தையும் குறைக்க உதவுகிறது.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும்- வெற்றிலை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுவதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது.
பல் ஆரோக்கியம்- ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் ரத்தக்கசிவை குறைத்து பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்- வெற்றிலை அஜீரணத்தை குறைத்து செரிமானத்தைத் தூண்ட உதவுகிறது. வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்றவும் பயன்படுகிறது
ஞாபக சக்தி- வெற்றிலை நரம்பு மண்டலத்திற்கு பலம் அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஞாபக சக்தியை மேம்படுத்த உதவகிறது.
முடி வளர்ச்சிக்கு உதவும்- வெற்றிலையை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வை குறைத்து, முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர உதவுகிறது. மேலும் பொடுகு மற்றும் தலை அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது.
உடல் எடை குறைக்க உதவும்- 2 வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிடும் பழக்கம் உடல் எடையை குறைக்க உதவும் என்று பாரம்பரியமாக கூறப்படுகிறது.
சிறுநீர் வெளியேற்றம் சீராகும்- வெற்றிலை சாறுடன் தண்ணீர் மற்றும் பால் கலந்து குடித்தால் சிறுநீர் நன்றாக பிரிய உதவும் என்று கூறப்படுகிறது.
இருமல் மற்றும் மூச்சுத்திணறல்- கடுகு எண்ணெயில் வெற்றிலையை சூடுபடுத்தி மார்பில் வைத்தால் இருமல் மற்றும் மூச்சுத்திணறலுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது பாரம்பரிய மருத்துவ முறையாகும்.
வலி நிவாரணி- வெற்றிலை இயற்கையான வலி நிவாரணியாக கருதப்படுகிறது. வெற்றிலையை அரைத்து காயம், சிராய்ப்பு அல்லது வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் வலி குறைய உதவும்.