பித்தம் முதல் புற்றுநோய் வரை தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு வறுவல்! இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே காய்கறிகளும் பழங்களும் ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும், கொண்டுள்ளது.
அந்தவகையில் பெரும்பாலானவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ளாத கருணைகிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் கொண்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி தங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் பித்தம் கட்டுப்படும்.
கருணைக் கிழங்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருப்பதுடன் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கும்.

மேலும் கருணை கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கின்றது.
கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சக்தியை கொண்டுள்ளது. குழந்தைகள், வயதானவர்களுக்கு எலும்புகள் வலு குறைவாக காணப்படும்.

கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிட்டால் எலும்புகள் வலிமை பெறும். கருணை கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கருணை கிழங்கை கொண்டு கல்யான வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் வறுவல் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
தண்ணீர் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சிறிதளவு
வறுவலுக்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
சிறிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தே.கரண்டி
தண்ணீர் - 1/4 டம்ளர்

அரைப்பதற்கு தேவையானவை
பூண்டு - 5 பல்
சோம்பு - 1 தே.கரண்டி
மிளகு - 1/2 தே.கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
சிறிய வெங்காயம் - பாதி (நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1
செய்முறை
முதலில் கருணைக்கிழங்கை சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு, சதுரத் துண்டுகளாக வெட்டி அதனை குக்கரில் போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து, குக்கரைத் திறந்து, வேகவைத்த கருணைக்கிழங்கை ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் பூண்டு, சோம்பு, மிளகு, இஞ்சி, சிறிய அளவிலான வெங்காயத்தில் பாதியை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த கருணைக்கிழங்கை போட்டு, நன்றாக வறுத்து, ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தையும் சேர்த்து கண்ணாடி பதத்துக்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கிய சிறிய தக்காளியையும் அதில் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பிறகு அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி, 1/4 டம்ளர் நீரை ஊற்றி, எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் ப்ரை செய்து வைத்துள்ள கருணைக்கிழங்கை சேர்த்து நன்றாக உயர் தீயில் வைத்து சிறிது நேரம் கிளறிவிட்டு, மசாலா கிழங்கில் ஒட்டும் வரை நன்கு ப்ரை செய்து இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில், ஆரோக்கியம் நிறைந்த சுவையான கல்யாண வீட்டு கருணைக்கிழங்கு வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |