மழைநீரை ஏன் குடிக்கக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியுமா? எச்சரிக்கும் ஆய்வு தகவல்!
பொதுவாகவே இன்றளவும் கிராம புரங்களில் மழை காலங்களில்,மழை நீரை சேகரித்து குடிப்பதற்கு பயன்படுத்துதையும் சமையலுக்கு உபயோகிப்பதையும் பெரும்பாலானவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
மழை நீர் தான் உலகிலேயே சுத்தமான தண்ணீர் என்ற கருத்தும் பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
இதில் எந்தளவுக்கு உண்மையிருக்கின்றது? மழை நீரை குடிப்பதற்கும் சமையலுக்கும் பயன்படுத்தலாமா? என்பது போன்ற குழப்பத்துக்கு அறிவியல் ரீதியான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மழை நீரை குடிப்பது ஆரோக்கியமானதா?
வானத்தில் இருந்து நேரடியாக மண்ணுக்கு வரும் மழை நீரே மிகவும் சுத்தமானது, அதனை முறையாக சேமித்து குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என பெரும்பாலான நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், மழை நீரை குடிப்பது மிகப்பெரிய ஆபத்து என்பது ஆற்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவில் மழை நீரில் பிஎஃப்ஏஎஸ் எனப்படும் நச்சு இரசாயனங்கள் செரிந்து காணப்படுவதால், மழை நீரை சேகரித்து நேரடியாக பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி மழைநீரில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். பல நேரங்களில் மக்கள் மழையில் நனையும்போது நோய்வாய்ப்படுகிறார்கள். மழைநீரில் நுண்ணிய துகள்கள் காணப்படுகின்றன. இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதுடன் பல தொற்று நோய்களையும் ஏற்படுத்தக்கூடியது.

எனவே, மழைநீரை கொதிக்க வைக்காமல் அல்லது சுத்திகரிக்காமல் அப்படியே பயன்படுத்துவது ஆபத்தானது. மழை நீரை நேரடியாக பருகுவதால், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை, வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் வயிற்று தொற்றுகளை ஏற்படுத்துவதுடன் தோல் பிரச்சனைகள் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்படுகின்றது.
குறிப்பாக முதல் 20 தொடக்கம் 30 நிமிடங்கள் பெய்யும் மழை நீரை நேரடியாக பருகுவது மற்றும் மழையில் நனைவது மிகவும் ஆபத்தான தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |