கணவருடன் நெருக்கமாக காணொளி வெளியிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே!
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது காதல் கணவர் வசி சாச்சியுடன் இந்த ஜனவரி மாதம் முழுவதும், செலவிட்ட அழகிய தருணங்கள் அடங்கிய காணொளிகளை வெளியிட்டு பிரபஞ்சத்துக்கு நன்றிசெலுத்தியுள்ளார்.
குறித்த காணொளி மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார். அதன் பின்னர் பிரியங்கா தேஷ்பாண்டே வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்துக்கு முன்னர் இருந்ததை விட இப்போது மிகவும் அழகாக தோன்றுகின்றார். தற்போது பிரியங்கா வெளியிடும் ஒவ்வொரு பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முழுவதும், தன் கணவருடன் செலவிட்ட அழகிய தருணங்கள் அடங்கிய காணொளிகளை வெளியிட்டு பிரபஞ்சத்துக்கு நன்றிசெலுத்தியுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |