அம்மாவான பின்னும் இப்படியா? செம ஆட்டம் போடும் நடிகை அமலா பால்... வைரலாகும் காணொளி!
நடிகை அமலா பால் செம க்யூட்டாக பிரேக் டான்ஸ் ஆடும் காணொளியை அவரது கணவர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அமலா பால்
இந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினாலும் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் தான் நடிகை அமலாபால்.
அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
டாப் நாயகியாக இருந்தபோதே இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த அமலா பால், 2017ல் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அதை தொடர்ந்து, இவர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
தற்போது சினிமாவை ஓரங்கட்டிவிட்டு கணவன் மற்றும் குழந்தையுடன் அமலா பால் நேரம் செலவிட்டு வருகின்றார்.
இந்நிலையில், தற்போது அமலா பால் செம க்யூட்டாக பிரேக் டான்ஸ் ஆடும் காணொளியை அவரது கணவர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
