ரவிமோகனை இப்படி கூறினாரா ஆர்த்தி ? வைரலாகும் புகைப்படம்
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் பட்டு வேட்டி-சட்டை அணிந்து, திருமண நிகழ்ச்சியில் இணைந்து பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கவனத்தை ஈர்த்தது.
இது வரை தங்கள் விவாகரத்து குறித்து பேசாமல் இருந்த ஆர்த்தி ரவி, அதனைத் தொடர்ந்து வெளியிட்ட மறைமுகமான அதிரடி அறிக்கை, மீண்டும் இந்த விவகாரத்தை ஊடகப் பேசுபொருளாக மாற்றியது.
ஆர்த்தி தனது அறிக்கையில் “மூன்றாம் நபர்” எனக் கூறி, நேரடியாக கெனிஷா பெயரை குறிப்பிடவில்லை. பின்னர் ரவி மற்றும் கெனிஷா இருவரும் விளக்கங்களை வெளியிட்டனர்.
ஆர்த்தி ரவி
இந்நிலையில், ரவி மோகன் மற்றும் கெனிஷா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
முன்னதாக அவர்கள் "ஹீலிங் சென்டர்" தொடங்க உள்ளதாக கூறியிருந்த நிலையில், அதுபற்றிய ஆலோசனைக்காகவே சென்றிருக்கலாம் என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வுகளுக்கிடையில் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "When your dog catches you petting another dog" என்ற ரீல்ஸை பகிர்ந்துள்ளார்.
இதை நெட்டிசன்கள், ரவி மற்றும் கெனிஷாவை மறைமுகமாகக் குறிக்கும் வகையில் எனக் கண்டுள்ளனர்.
இதன் மூலம் ஆர்த்தி தனது மனநிலையை வெளிப்படுத்தி இருப்பதாகவும், “இது தான் உண்மையான ‘indirect attack’!” எனவும் சமூக வலைதளங்களில் கலகலப்பாக பேசப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
