இரண்டு குழந்தைக்கு தயான பிறகும் இவ்வளவு குறும்புத்தனமா? ஆல்யா மானசா செய்த வேலையை பாருங்க
சீரியல் நடிகை ஆல்யா மானசா, ட்ரெண்டிங் காணொளியொன்றை ரீகிரியேட் செய்து குழந்தை தனமான வெட்கத்துடன் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆல்யா மானசா
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையிலும் ஜெயித்து வருபவர் தான் ஆல்யா மானசா.
ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.
இந்நிலையில், தற்போது ஆல்யா மானசா ஜீ தமிழில் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்த தொடரில் காது கேட்காத நபராக நடிக்கிறார். மேலும் ஜீ தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு வெற்றிநடை போட்டு வரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகின்றார்.
சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாலும், சமூக ஊடகங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் ஆல்யா மானசா ட்ரெண்டிங்கில் உள்ள ரீல்ஸ் ஒன்றை ரீகிரியேட் செய்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |