இலங்கை பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா... குவியும் லைக்குகள்!
இலங்கையின் ட்ரெண்டிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு சீரியல் நடிகை ஆல்யா மானசா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஆல்யா மானசா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமான திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஆல்யா மானசா.

இவர், ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடி தான் டாப்பில் இருக்கின்றார்கள்.

மதத்தால் வேறுப்பட்ட பழக்கவழக்களை கொண்டவர்கள் என்றாலும், நல்ல காததலுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

ஆல்யா மானசா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும், பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகின்றார்.
இந்த தொடரில் இசை என்ற கதாப்பாத்திரத்தில் காது கேளாத பெண்ணகாக நடித்துவருகின்றார்.இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகின்றது.
படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதற்கும் தவறுவது கிடையாது.

ஒரு மனைவியாகவும்,அம்மாவாகவும் தனது கடமைகளையும், பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி வரம் ஆல்யா சமூக ஊடகங்களில் ரசிகர்களை மகிழ்விப்பதிலும் டாப்பில் தான் இருக்கின்றார். இந்நிலையில், இலங்கையின் ட்ரெண்டிங் பாடலுக்கும் அசத்தலாக குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |