சர்ச்சைக்கு மத்தியில் ஜாலியாக ரவிமோகன் வெளியிட்ட காணொளி! கொந்தளித்த நெட்டிசன்கள்
விஜய்- சங்கீதா விவாகரத்து சர்சையால் இணையமே கொந்தளித்து வரும் நிலையில் ஏற்கனவே மனைவியை பிரிந்து பாடகி கெனிஷாவுடன் நெருக்கம் காட்டிவரும் நடிகர் ரவி மோகன் நான் அமைதியாக என் வாழ்க்கையைஉருவாக்கிக் கொண்டிருக்கிறேன்... என ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
குறித்த காணொளி வைராகிய நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் வலுத்து வருகின்றது.பலரும் மிகவும் மோசமான நடத்தை என விமர்ச்சித்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.

ரவி மோகன்
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன். ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இவரின் விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்தே பாடகி கெனிஷா தொடர்பான சர்ச்சையும் ஆரம்பமாகியது.

ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்றும், அதைத்தாண்டி தங்களுக்குள் ஒன்றும் இல்லை என்றும் கூறினர்.
ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்தில் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து இருவரும் ஜோடியாக கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைகளை உண்மையாக்கியது.

ஆர்த்தியுடனான பிரிவுக்கு பின்னர் ரவி மோகன் கெனிஷாவுடன் அதிக நெருக்கம் காட்டிவரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாகவே கடினமான சூழ்நிலைகளையும் நிதானத்துடன் கடந்து வருகின்றார்.
தற்போது விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைகளுக்கு மத்தியில் ரவிமோன்- கெனிஷா பாணியில் விஜய் -த்ரிஷாவும் ஒரு திருமண நிகழ்வில் ஒரே நிற ஆடையில் பங்கேற்று சர்ச்சைகளை உண்மையாக்கும் வகையில் நடந்துக்கொண்டதால், இணையத்தில் இந்த ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தது ரவிமோகன் தான் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரவிமோகன் நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்... என பதிவிட்டு தற்போது ஜாலியாக வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது. குறித்த காணொளியின் கீழ் நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்ச்சித்து வருகின்றார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |