பாசத்தில் ஆல்யா மானசாவையே மிஞ்சிய மகள்... இந்த வயதில் வாங்கிய பட்டத்தைப் பாருங்க
நடிகை ஆல்யா மானசாவின் மகள் பள்ளியில் பட்டம் வாங்கியுள்ள நிலையில், தனது தம்பிக்கு தாயாக மாறியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஆல்யா மானசா
பிரபல ரிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் ஆல்யா மானசா. அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது நடிப்பில் பிஸியாக காணப்படுவதுடன், வேறு தொழிலிலும் வருமானம் பார்த்து வருகின்றார்.

அவ்வப்போது தனது மகள் மற்றும் மகனுடன் காணொளியினை வெளியிட்டு வரும் நிலையில் தற்போதும் ஆல்யா பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது.
ஆல்யாவைப் போன்று அவரது அகல் ஐலாவும் பயங்கர சுட்டித்தனத்துடன் காணப்படுகின்றார். இந்நிலையில் அவர் பள்ளியில் பட்டம் வாங்கியுள்ள புகைப்படத்தினையும், தனது தம்பியை அன்போடு பார்த்துக் கொள்ளும் காணொளியினையும் பதிவிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள், தனது தம்பிக்கு தாயாகவே மாறிவிடுகின்றார்... பாசத்தில் ஆல்யாவையே தோற்கடித்துவிடுவார் போல என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |