இன்ஸ்டாகிராமில் ஆல்யா பெற்ற சாதனை... சஞ்சீவ் கொடுத்த விலையுயர்ந்த பரிசு! வாயடைக்க வைத்த புகைப்படம்
ஆல்யா தனது இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்ஸ் பின்தொடர்வதால் அவருக்கு 3 மில்லியன் மதிப்புள்ள கார் ஒன்றினை சஞ்சீவ் பரிசாக வழங்கியுள்ளார். பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில், ஜோடியாக நடித்து பின்பு ரியல் ஜோடியாக மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.
பெரும் ரசிகர் பட்டாளத்தினை வைத்துள்ள இவர்கள் திருமணத்திற்கு பின்பு ஒரு பெண்குழந்தையினை ஆல்யா பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஐலா சையத் என பெயரும் சூட்டினார்கள். அவ்வப்போது தங்களது குழந்தையின் புகைப்படம், காணொளியினை எடுத்து வெளியிட்டு வருகின்றார்கள் இருவரும்.
இந்நிலையில் ஆல்யா தனது இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்ஸ் பெற்றுள்ளதால், சஞ்சீவ் தனது பாணியில் 3 மில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட கார் ஒன்றினைப் பரிசளித்துள்ளார்.