திட்டு திட்டாக முடி கொட்டுகிறதா? இனி கவலை வேண்டாம்: ஷாம்புவுடன் இதை சேர்த்தால் மட்டும் போதுமாம்
பொதுவாக பெண்களுக்கு முக அழகு மற்றும் தலைமுடி இவை இரண்டு விடயத்தில் அதிக கவனம் இருக்கும்.
பெண்களுக்கு இருக்கும் தேவைகளில் முக்கியமானவைகள்
ஏனெனின் ஒரு பெண்ணிற்கு அழகைக் கொடுக்கும் அம்சங்களில் இது முக்கிய இடத்தை பிடிக்கிறது. இதில் ஏதாவது கோளாறுகள் ஏற்படும் போது பெண்கள் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள்.
இதன்படி, சில பெண்கள் மிகவும் விலைக் கொடுத்து தமது உடம்பிலுள்ள இயற்கை அழகை செய்கையான இரசாயனப் பொருட்களைக் கொண்டு அழகுப்படுத்துவார்கள்.
ஆனால் இந்த சிகிச்சைகள் ஆரம்பத்தில் சிறப்பான ஒரு நன்மைக் கொடுத்தாலும் காலப்போக்கில் பிரச்சினையை கொடுக்கும்.
தலைமுடி , முக அழகு இவை இரண்டிலும் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் என்ன தெரியுமா? தமது உடல் வைட்டமின்கள், கலோரிகள் மற்றும் கால்சியம் என பல ஊட்டச்சத்துக்களின் சேர்வை.
இவை முறையாக பாதுகாக்க தவறும் பட்சத்தில் தலைமுடி உதிர்வு, பொடுகு, தலைமுடி வெடிப்பு, அடர்த்தியின்மை மற்றும் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், முகப்பொலிவு இல்லாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இதனை எவ்வாறு நிரந்தரமாக கட்டுபடுத்தலாம் என யோசித்ததுண்டா? இதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த வழி கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும் ஆனாலும் செய்யலாம்.
இதனால் மேற்குறிப்பிட்ட அழகு சார்ந்த பிரச்சினைகள் குறையும். மேலும் இளமை போகாமல் நீண்ட நாட்களுக்கு 18 வயது குட்டி பெண்ணாகவே இருக்கலாம். அப்படி என்ன என்று யோசிக்கீறிங்களா?
சரும பிரச்சினைகள் மற்றும் தலைமுடிக்கான தீர்வு
- தினமும் காலையில் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிக்கும் போது எமது உடம்பிலுள்ள அனைத்து பகுதிகளும் வேலைச் செய்ய ஆரம்பிக்கிறது.
- காலை முதல் இரவு வரைக்கும் சாப்பிடும் உணவுகளில் பச்சையான உணவுகள் ஏதாவது எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் கால்சியம் இருந்துக் கொண்டே இருக்கும். இது தலைமுடி வளர்ச்சி, முகம் பொலிவு என்பவற்றை பாதுகாக்கிறது.
- வாரத்திற்கு இரண்டு தடவைகள் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது தலையிலிருக்கும் வெப்பம் அகன்று தலை குளிர்ச்சியடையும்.
அந்தவகையில் சரும பிரச்சினைகள் மற்றும் தலைமுடி பிரச்சினைகள் என்பவற்றை இலகுவில் குணப்படுத்தும் மருத்துவ குறிப்புக்களை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.