தீபாவளியன்று தலைக்கு எண்ணெய் வைக்கணும்? இதனால் வரும் நன்மைகள் என்ன தெரியுமா?
தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான், புத்தாடை உடுத்து உறவினர்கள், நண்பர்களுக்கு பலகாரங்கள் கொடுத்து உற்சாகமாக அனைவரும் கொண்டாடுவர்.
அன்றைய தினம் ஒருசில சம்பிரதாயங்களையும் கடைபிடிப்பது வழக்கமாக உள்ளது.
அதில் ஒன்று தான் காலை எழுந்தவுடன் எண்ணெய் தேய்த்து குளிப்பது, இதை காலங்காலமாக பின்பற்றி வந்தாலும் இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாம் அறிந்திருக்கமாட்டோம்.
இந்த பதிவில் எப்போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாம், குளித்த பின் என்ன செய்யக்கூடாது, எதை சாப்பிடக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
எண்ணெய் குளியல்
அன்றைய தினம் காலை 5 மணியளவில் எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது, சொசொதவென எண்ணெய் தேய்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.
உடல் முழுவதும் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து விட்டு, அரைமணிநேரம் இளவெயிலில் நிற்க வேண்டும்.
தொடர்ந்து சீயக்காய் தேய்த்து நன்றாக குளியல் போடுவதால் சிறந்த பலன்களை பெறலாம்.
எந்த எண்ணெய் பயன்டுத்தலாம்?
எண்ணெய் குளியல் என்றாலே நல்லெண்ணெய் தான், இது உடல் உஷ்ணத்தை குறைத்துவிடும்.
இதேபோன்று தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயையும் பயன்படுத்தலாம்.
இல்லாவிட்டால் மூன்று எண்ணையையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தும் பயன்படுத்தலாம்.
பயன்கள் என்னென்ன?
தைராய்டு பிரச்சினை, உடல் உஷ்ணம், எலும்பு தேய்மானம், மூட்டுவலி, கண் எரிச்சல் போன்வற்றிற்கு தீர்வாகிறது எண்ணெய் குளியல்.
உடல் சூடு வெளியேறி உள் உறுப்புகளின் இயக்கமும் சீராக நடக்கும், சருமத்தின் வழியாக உடலின் கழிவுகள் வெளியேறிவிடும்.
உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், மன அழுத்தத்தை குறைக்கிறது.
செய்யக்கூடாதவை
எண்ணெய் தேய்த்து குளித்தவுடன் பகல் வேளையில் தூங்கக்கூடாது, ஏனெனில் கண்களில் வழியாக வெளியேற வேண்டிய வெப்பம் உடலுக்குள்ளேயே தங்கிவிடும்.
இதேபோல் குளிர்ச்சி தரும் உணவுகளையும் தவிர்த்துவிடவும், முதன்முறையாக எண்ணெய் குளியல் என்றால் சோர்வாக உணர்வீர்கள்.
இது நாளடைவில் சரியாகிவிடும், பெண்களுக்கு வெள்ளி, செவ்வாய் நாட்களும், ஆண்களுக்கு சனியும், புதனும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.