Allu Arjun: கைது இல்லை.. வெறும் விசாரணை: உண்மையில் நடந்தது என்ன?
நடிகர் அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது அவரை காவல்துறையினர் காவல் துறை வாகனத்தில் அழைத்து சென்ற சம்பவம் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு, பல்வேறு ஊடகங்களிலும் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.
புஷ்பா 2
சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த வழக்கில் புஷ்பா 2 நாயகன் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றது.
புஷ்பா 2 திரைப்பம் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு வருகின்றது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகின்றது. 6 நாட்களில் 1000 கோடியை கடந்து வசூல் வெறியாட்டம் ஆடிவருகின்றது.
இந்த திரைப்படத்தின் முதல் நாள் சிறப்பு காட்சியை காண அல்லு அர்ஜுன் வருவதாக வந்த தகவலை அடுத்த ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அல்லு அர்ஜுன் தரப்பில் விளக்கம்
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அல்லு அர்ஜுன் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அதன் போது காவல் துறையினரின் பாதுகாப்பில் சென்றமையால் குறித்த விடயம் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதாக உலா வரும் செய்திகள் உண்மையில்லை. அவர் வெறும் விசாரணைக்காகவே சென்றார். என அல்லு அர்ஜுன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |