ரஜினியின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்திய நயன்தாரா... வைரலாகும் பதிவு
நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த தினத்துக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. இவருடைய வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக, Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் கடந்த நவம்பர் 18 ஆம் திகதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர் தனது அதாத்திய நடிப்புத் திறமையால், தற்போது பாலிவுட் வரையில் கொடிக்கட்டி பறக்கின்றார்.
சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.
ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை நயன் எதை செய்தாலும் சற்று வித்தியாசமாக செய்வது வழக்கம்.
அந்தவகையில் நேற்றைய தினம் தனது 74 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துகூறி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நயன்தாரா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி இணைந்து சந்ரமுகி, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களில் நமத்துள்ளனர். மேலும் சிவாஜி தி பாஸ் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நமனமாடியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |