தன் மகளுடன் கொஞ்சி விளையாடும் அல்லு அர்ஜூன் - வைரலாகும் க்யூட் வீடியோ!
தன் மகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் அல்லு அர்ஜூனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் அல்லு அர்ஜூன்
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும், நடனக் கலைஞராகவும் திறம்பட செயலாற்றி வருகிறார். இவர் ஆர்யா, சங்கர் தாதா சிந்தாபாத் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 2 முறை நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.
சமீபத்தில் வெளியான புஷ்பா படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.
அதிலும், நடிகை சமந்தா ஆடின ‘ஓ சொல்றியா.. மாமா.. பாட்டு’ பட்டுத்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனையடுத்து ‘புஷ்பா 2’ படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
வைரலாகும் க்யூட் வீடியோ
சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அல்லு அர்ஜூன் அவ்வவ்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகள் அர்ஹாவுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், அவர் தன் மகளுடன் கொஞ்சி விளையாடியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.