முதலை உருவத்தில் ஊர் மக்களை மிரட்டிய மீன்! இது கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பார்ப்பதற்கு முதலை போல் இருக்கும் மீனின் புகைப்படம் பார்ப்பதற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அரியவகை மீன்
கடந்த19 ஆம் திகதி போபாலிலுள்ள குளத்திற்கு அனஸ் என்ற நபரொருவர் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு பார்ப்பதற்கு முதலை போல் உள்ள மீனொன்று இவரின் கண்ணில் தென்பட்டுள்ளது. அதனை பிடித்து பார்த்த போது மீன் போல் இருந்தால் இது குறித்து அக்கம் பக்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோக்காட்சியை பார்த்த வட அமெரிக்காவிலுள்ள நிபுணரொருவர், பற்களைக் கொண்ட அலிகேட்டர் கார்ஃபிஷ் என்ற இந்த வகை மீன்களில் ஒன்று என தெரிவித்துள்ளார்.
அரண்டு நிற்கும் மக்கள்
இந்த மீன் வகை எப்படி குளத்திற்கு வந்தது என வனத்துறையினர் விசாரித்து பார்த்த போது இது சந்தையிலிருந்து கொண்டு வந்து குளத்தில் விடப்பட்டிருக்கலாம் என கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
இந்த மீன்கள் மற்றைய மீன்களுக்கும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் வனத்துறையினர் தீவிர சோதனையில் இறங்கியுள்ளார்கள்.
மேலும் அலிகேட்டர் மீன்களின் ஆயுட்காலம் 18-20 ஆண்டுகள் இருக்கக்கூடும்.இதனால் சற்று ஆபத்து விளைவிக்கும்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.