ஒரு மீனின் விலை ரூ7.8 லட்சம்... அப்படி என்ன இருக்கிறது இந்த மீனில்?
கடலில் மிக அரிதாக கிடைக்கும் குரோக்கர்ரக மீன் ஒரு மீன் ரூ7.8 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது.
இந்த மீன்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மிக அரிதாக கிடைக்கும் என்பதால் இந்த மீனிற்கு இந்த விலை கிடைக்கிறது.
மருத்துவ குணங்கள்
இந்த குரோக்கர்ரக மீன் அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்தது.
இந்த மீனில் காணப்படும் ஏர் பிளாடர் என்ற பகுதி மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது அறுவை சிகிச்சை முடிந்ததும் தையல் போடப்படும் போது பயன்படும். இதை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் பக்கவிளைவுகளின்றி காயம் குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மஞ்சள் க்ரேக்கர் ரக மீன்
குறிப்பாக இதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகளின் போது இதை பயன்படுத்தினால் காயம் வெகு சுலமாக ஆறுவது மட்டுமில்லாமல் பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்குமாம்.
இதை பயோடெக்னாஜி இன்பர்மேஷன் ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக குரோக்கர்ரக மீன்களில் மஞ்சள் க்ரேக்கர் ரக மீன்களில் தான் அதிகம் மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கேன்சர்
இந்த மீன் கேன்சர் வியாதி மேலும் பரவாமல் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மீன் மிகப்பெரிய மருந்தாக இருக்கிறது. குறிப்பாக அவர்களின் வாழ்நாளையே அதிகரிக்கும் குணம் இந்த மீனிற்கு இருப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர்.
இந்த மீன் மனிதர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் தொற்றுகளை சரி செய்யவும் பயன்படுகிறது.
சவுத் எல்லோ கடல்
பொதுவாக இந்த ரக மீன்கள் சீனா - கொரியாவிற்கு இடைபட்ட கடற்பகுதியான சவுத் எல்லோ கடல் பகுதியில் அதிகம் காணப்படும்.
ஆனால் இந்த ரக மீன்களை பிடிப்பது மிகப்பெரிய சவாலான விஷயம். ஏன் என்றால் இந்த மீன்கள் பெரும்பாலும் கடலின் ஆழத்தில் வாழும் குணம் கொண்டது.
2 மாதங்கள்
இது கருவுறும் காலம் தான் கடலின் மையப்பகுதிக்கோ அல்லது மேற்பகுதிக்கோ வரும். அதுவும் இந்த மீன்களின் கருவுறும் காலம் வெறும் 2 மாதங்கள் தான்.
அதனால் ஆண்டிற்கு 2 மாதம் மட்டுமே இந்த மீன்களை பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதுவும் இந்த ரக மீன்கள் அதிக விலைக்கு விற்பனையாவதற்கு முக்கியமான காரணம்
சிவப்பு பட்டியல்
1970களில் சீனாவில் சுமார் 2 லட்சம் குரோக்கர்ரக மீன்கள் பிடித்து உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன.
அதன் பிறகு கடலில் குரோக்கர் ரக மீன்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் இந்த ரக மீன்கள் சிக்குவதே அரிதாகிவிட்டது.
அதன் பின் சர்வதேச இயற்கை பாதுகாப்பு மையம் இந்த மீனை சிவப்பு பட்டியலில் சேர்த்துவிட்டது. சிவப்பு பட்டியல் என்றால் அழிந்து வரும் இனங்களை குறிக்கும் பட்டியல்.
இந்த ரக மீன்களை மையமாக வைத்து சீனா, தைவான், தென் கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால் இன்று அந்த நிறுவனங்கள் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதால் மருந்துகளை தயாரிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.