6 மாடி பிரமாண்ட வீட்டை கட்டிய ஆலியா பட்.. எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்- ஆலியா பட் 6 மாடி பிரமாண்ட வீட்டை கட்டி குடியேறிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ரன்பீர் கபூர்.
இவர் நடிகை ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா பட், கடைசியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகின்றது.

அதாவது, தன்னுடைய ஆசை மகள் ராஹாவின் 3வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிதாக வீடு கட்டிய குடியேறியுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
கோடிகளில் வீட்டின் பெறுமதி
மும்பையின் பாலி ஹில் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் குறித்த வீடு 6 மாடி அடுக்குகளை கொண்டது என்றும் அதன் விலை 250 கோடி இருக்கும் என்றும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆலியா பட் கட்டியிருக்கும் புது வீட்டிற்கு பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |