இனி வீட்டிலேயே லிப்ஸ்டிக் தயாரிக்கலாம்! வெறும் 3 இயற்கை பொருட்கள் போதும்
பொதுவாகவே பெண்கள் பயன்படுத்தும் பல அழகுசாதன பொருட்களில் லிப்ஸ்டிக் மிகவும் முக்கிய இடத்தை பிடித்து விடுகின்றது.
முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகளும் அழகாக இருந்தால் தான் நமது தோற்றமே அழகாக மாறும். எவ்வளவு மேக்அப் பொருட்களை பயன்படுத்தினாலும் உதடுகளை வெறுடையாக விட்டுவிட்டால், மொத்தமும் பயனற்றதாக ஆகிவிடும்.

அதனால் தான் பெண்களின் முக அழகினை எடுத்துக்காட்டுவதில் உதடுகள் முக்கிய இடம் வகிக்கின்றது. பெண்களில் அதிகமானோர் லிப்ஸ் டிக் பாவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இன்னும் சொல்லப்போனால் லிப்ஸ் டிக் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறாத பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஆனால் இவ்வாறு ரசாயனம் கலந்த லிப்ஸ்டிக்கை தினசரி பயன்படுத்துவதால், உதடுகள் நாளிடைவில் கருப்பாக ஆரம்பித்துவிடுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் காணப்படுகின்றது.
இதற்கு தீர்வு கொடுக்கும் வகையில் தினசரி பாவனைக்கு உகந்தவாறு, எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி வீட்டிலேயே வெறும் மூன்றே இயற்கை பொருட்களை வைத்து எவ்வாறு லிப்ஸ்டிக் தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீட்ருட் - 1 (சாதாரண அளவில்)
நெய் 1/2 தே.கரண்டி
தேன் 1/2 தே.கரண்டி

செய்முறை
முதலில் பீட்ருட் ஒன்றை நன்றாக சீவியதும், அதனை சிறிது சிறுதாக வெட்டி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்த பீட்ருட் சாறை மூன்று முறை வடிக்கட்டி எடுக்க வேண்டும்.
அதன் பின்னர் பீட்ருட் சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அதில் நெய் மற்றும் தேன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
இறுதியாக விருப்பமான ஒரு சிறிய போத்திலில் ஊற்றி 20 நிமிடங்கள் ஆற விட்டு எடுத்தால் அவ்வளவு தான் எந்தவித ரசாயன கலவையும் இன்றி உதட்டுச்சாயம் தயார்.
இந்த லிப்ஸ்டிக்கை தினமும் பயன்படுத்தினாலும் சரி இரவு முழுவதும் அகற்றாமல் விட்டாலும் சரி எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |