7 மாதம் இதய ஓட்டமே உறைந்துபோய் குளிரில் உயிர் வாழும் அதிசய மரத்தவளை... எப்படி தெரியுமா?
7 மாதங்கள் பனியில் உறைந்து உணவில்லாமல் உயிர் வாழும் அதியசய மரத்தவளை சுவாரசியத்தை தெரிந்துகொள்வோம். உலகில் அனைத்து நாடுகளுமே கால நிலை பல்வேறு விதமான மாறிக்கொண்டே தான் இருக்கிறது.
அதிலும், இந்தியாவில் தான் அனைத்து கால நிலையும் மாறக்கூடிய நாடாகும். அதைப்போல அமெரிக்காவில், பாலைவனம், மலைச்சிகரங்கள், பனிசூழ்ந்த பகுதிகள், பள்ளத்தாக்கு மற்றும் சமவெளிப்பகுதிகள் என தன்னகத்தே பல விதமான நிலப்பரப்புகளை கொண்டுள்ளன.
இதில், அலாஸ்கா மாகாணத்தில் வருடத்தில் 7 மாதங்கள் பனிப்பொழிவு கடுமையாக இருக்குமாம். செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் பனிக்காலத்தில் மட்டும் -2 டிகிரி செல்சியஸ் குளிரானது அக்டோபர்., நவம்பர்., டிசம்பர்., ஜனவரி., என ஏப்ரல் வரை 7 மாதங்களில் -29 டிகிரி வரை சென்று, மே மற்றும் ஜூன் மாதத்தில் -9 டிகிரி அளவில் இருக்குமாம்.

ஆனால், அதில் இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஜூலை மற்றும் ஆகஸ்டில் 1டிகிரி அல்லது 2 டிகிரி வரை வெப்பம் பதிவாகுமாம். அங்கு வாழும் மக்களுக்கு இந்த தட்பவெப்பநிலை பழியது என்றாலும், அடிக்கடி ஏற்படும் கடுமையான குளிர் புயலையும் எதிர்க்கொள்ளவும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.
இதனால், அங்கு வாழும் மக்களும் சரி, உயிரினங்களும் சரி வருடத்தின் 7 மாதம் இதய ஓட்டம் மற்றும் இரத்த ஓட்டத்தை நிறுத்தி, பனிக்குள் உறைந்து பின்னர் பருவகாலம் வந்ததும் மீண்டு வருமாம்.
இதில், அதிசிய மரத்தவளை ஒன்று இருக்கிறது. இதை இயற்கையின் அற்புதம் என்றும் கூறலாம். ஏனென்றால், இந்த அதியச தவளையானது கிட்டதட்ட 7 மாதம் வரை எந்தவித உணவும் இல்லாமல் உடலில் இரத்தமே செல்லாமல், உடலின் தோல் பகுதிகள் முதல் பனியால் உறைந்து உடலை அழுகாமல் பார்த்துகொள்கிறதாம்.
அதன் பின்னர் பருவகாலம் வந்த பின்னர் மீண்டும் தனது வாழ்நாளை புதிதாக தொடங்கி உணவுக்கு வேட்டையாடுமாம்.
Wood frogs in Alaska freeze for seven months a year??
— Susanta Nanda (@susantananda3) December 15, 2021
And their hearts stop beating and no blood flows. When the weather gets warmer, they thaw and hop away. Amazing Nature.
Via Angie Karan pic.twitter.com/cqEajgvMco