ஜவான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அலப்பறை.. தலையில் கட்டுடன் அமர்ந்திருந்த காட்சி!
ஜவான் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஷாருக்கான் கெட்டப்பில் வருகை தந்து பார்ப்பவர்களை ரசிகர்கள் அலற விட்டுள்ளார்கள்.
இயக்குநர் அட்லி
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்து வருபவர் தான் இயக்குநர் அட்லி.
இவர் இயக்கத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி “ஜவான்” திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஷாருக்கான், விஜய் சேதுபதி என முக்கிய பிரபலங்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள்.
இதனால் அட்லியின் இந்த திரைப்படம் எவ்வாறு இருக்க போகின்றது என பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள்.
புதிய கெட்டப்பில் ரசிகர்கள்
இந்த நிலையில் ஜவான் திரைப்படத்திற்கு ஷாருக்கான் கெட்டப்பில் தியேட்டரில் அமர்ந்திருப்பது போன்ற காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த காட்சியை பார்த்த மற்றைய ரசிகர்கள் சற்று அதிர்ச்சயடைந்துள்ளார்கள்.
அத்துடன் “ இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கு..” என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |