நடிகை சித்ரா தற்கொலை வழக்கு... கணவரின் அதிர்ச்சி புகார்! மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை;

V. J. Chitra
By Rooban May 02, 2022 11:58 PM GMT
Report

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதியில் நட்சத்திர ஓட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதன்பின்னர், சித்ராவை, அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு துாண்டியதாக, அவரது தந்தை காமராஜ் கொடுத்த புகார்படி, நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சித்ராவின் கணவரை கைது செய்தனர்.

தொடர்ந்து, கடந்த 2021 மார்ச் 3ல், ஜாமினில் அவர் வெளியில் வந்தார். இதனையடுத்து, போலீசார், தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சித்ராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சகோதரி சரஸ்வதி உள்ளிட்ட பலரிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரித்தனர்.

சென்னை, பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள், சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தது தெரிய வந்தது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அப்போதைய ஆளும் கட்சி முக்கிய பிரமுகர்கள் என்பதால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல், வழக்கை கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். மேலும், என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன்.

ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான் தான் என என்மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உயிரோடு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஹேம்நாத் கடிதம்

மேலும், சித்ரா மரணத்துக்கு ஒரு முக்கிய அரசியல்வாதி, போதை கும்பல், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் தான் காரணம். அவர்கள் மிகுந்த பணபலம் மிக்கவர்கள். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. எனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணபலமிக்க மாஃபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் அவர்கள் வெளியே சொன்னால் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன் சாதாரண மனிதன் என்னால் என்ன செய்ய முடியும்? அப்படி செய்தாலும் என் மனைவி எனக்கு திரும்பி கிடைக்க மாட்டாள்.

தற்போது என் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கவே வாழ்ந்து வருகிறேன். மேலும், மரணத்திற்கு காரணமானவரிடம் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரிடம் பணம் பறிக்க முயல்வதாகவும் அதற்கு நான் ஒத்துழைக்கவில்லையென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர்.

என்னுடைய மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களின் பெயரை வெளியே சொன்னால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அந்த அரசியல் தலைவர் மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை உயிர் வாழ விரும்புகிறேன். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும என ஹேம்நாத் கூறியுள்ளார்.

இதனிடையில், நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம் என்பதை கண்டறிய, மீண்டும் அந்த வழக்கை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவருடன் தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்டுள்ளன. இவர்களை போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து தீவிரமாக விசாரிக்க உள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US