அட்சய திருதியை 2024: தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி வாங்குவது அதிர்ஷ்டம் கொடுக்குமா?
இந்து சாஸ்திரத்தின் அடிப்படியில் அட்சய திருதியை என்பது மிகவும் சிறப்பு மிக்க நாளாக பார்க்கப்படுகின்றது.
அட்சய திருதியை என்பதன் உண்மையான அர்த்தம் வளர்க என்பதாகும். அதனால் தான் அட்சய திருதியை நாளில் எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் அது மேம்மேலும் உயர்வு கொடுக்கும் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் அந்த ஆண்டு ழுழுவதும் சிறந்த பெருக்கத்தை கொடுக்கும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
சித்திரை மாதத்தில் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகின்றது. அட்சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாத பொருள் என்று அர்த்தம்.
இந்த ஆண்டு மே 10ஆம் திகதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் திகதி மதியம் 2:50 மணிக்கு வரை நீடிக்கின்றது.
அட்சய திருதியை நாளில் நகை வாங்க உகந்த நேரம் மே 10 மற்றும் 11 ஆகிய இரு தினமும் காலை 5:33 முதல் மதியம் 12:18 வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை கொடுக்கும்.
அதனால் தங்கம் வெள்ளி மட்டுமல்லாது வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெருகிக்கொண்டே போகும். ஆனால் இந்த நாளில் தங்கம் வாங்குவது அனைவருக்கும் சாத்தியமான விடயமாக இருப்பதில்லை.
அப்படி தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த நாளில் வெள்ளி நகை, வெள்ளி பொருட்கள், வெள்ளி பாத்திரங்கள் போன்ற பொருட்களை வாங்கலாம். தங்கத்துடன் ஒப்பிடுகையில் வெள்ளியின் விலை மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
முன்னைய காலத்தில் தங்கத்திற்கு பதிலாக வெள்ளி பாத்திரங்களை சிலவற்றிற்கு பயன்படுத்தியுள்ளனர்.வெள்ளியும் லட்சுமியுடன் தொடர்புடையது தான்.
வெள்ளிக்கு நேர்மறை ஆற்றலையும் அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கின்றது. அட்சய திருதியை நாளில் வெள்ளி வாங்குவதும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |