பாம்பு கடித்தவுடன் இதை மட்டும் செய்திடாதீங்க: ஆபத்து உறுதி
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் இனம் புரியாக பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழி கூட இருக்கின்றது.
பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. அனைவரும் பயப்படுவதற்கு காரணம் அதன் விஷம் தான்.
பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தனது இரையை வேட்டையாடுவதற்காகவே. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்காகவோ அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்ல.
மாறாக மனிதர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினால் தான். பாம்புகள் கடித்தால் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன செய்ய கூடாது?
பாம்பு கடித்து விட்டால் உடனடியாக சிலர் துணியால் பாம்பு கடித்த இடத்திற்கு மேல் இறுக்கமாக கட்டிவிடுவார்கள்.இது முற்றிலும் தவறு இப்படி செய்வதால் ரத்த ஒட்டம் தடைப்பட்டு அந்த பகுதி செயலிழந்து போகவும் வாய்ப்பு இருக்கின்றது.
பாம்பு கடித்துவிடால் ஓடவோ அல்லது நடக்கவோ கூடாது. இது விஷம் உடல் முழுவதும் விரைவாக பரவுததை தடுக்க உதவும்.
பாம்பு கடித்தவுடன் முதலுதவி செய்வதாக நிகைத்து பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இது முதலுதவி செய்பவருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தும்.
பாம்பு கடித்தவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.
பாம்பு கடித்தவுடன் பதற்றம் அடைய கூடாது. இதுவும் பாதிப்பை அதிகமாக்கிவிடும். கடித்த பாம்பின் அடையாளத்தை பார்த்துக்கொள்வது சிகிச்சை வழங்குவதற்கு துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |