500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்: அட்சய திருதியை அன்று உருவாகும் குரு பெயர்ச்சி!
சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நற்செயல் ஒன்றுதான் இந்த ஆண்டு நிகழவுள்ளது.
அதாவது வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை அட்சயத் திருதியை நாளில் குருப்பெயர்ச்சியும் நடக்கிறது. குருபகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருட அட்சயத்திருதியை தினத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதால் இந்த குருப்பெயர்ச்சியும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
இந்த சிறப்பு தினத்தில் 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமையுமாம். அந்த நாளில் தங்கம் வாங்க யோசிப்பவர்களும் முதலீடு செய்ய நினைப்பவர்களும் எவ்வித பயமும் இல்லாமல் நினைத்ததை செய்யலாம்.
ரிஷப ராசி
இந்த அட்சய திருதியை தினத்தில் ஆடை, ஆபரணங்கள் மூலம் சிறந்த பலன்களை பெறுவீர்கள். அதுமட்டுமல்லால் 2023ஆம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சியும் நடைபெறுவதால் உங்கள் அனைத்து விருப்பங்களும் நடைபெறும். நீங்கள் இத்தரைன நாள் நினைத்து நினைத்து அழுதுக் கொண்டிருந்த கவலை எல்லாம் மறந்து புதிதாக மாறுவீர்கள். மேலும், குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கை வாழ்க்கையில் எந்த அதிருப்தியும் இல்லாமல் திருப்தியாக வாழ்வீர்கள். ஆனால் பணம் செலவழிக்கும் விடயங்களில் கொஞ்சம் கராராக இருங்கள்
சிம்மராசி
சிம்மராசிக்காரர்கள் இந்த தினத்தில் அலுவல வேலை அல்லது வியாபார விடயங்களில் அதிக பயணங்களை சந்திப்பீர்கள். இதனால் நீங்கள் வெளிநாடு செல்ல கண்ட கனவும் நிறைவேறும். மேலும், மேஷ ராசியில் உச்சம் பெற்றிருக்கும் சூரியனால் இந்த அட்சயதிருதியை தினத்தில் சமூகத்தில் உங்களுக்கு நற்பெயர்களும் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் குருப்பெயர்ச்சியும் மாணவர்களின் கல்விக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
விருச்சிக ராசி
இந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்புகளும் நிலுவையில் இருக்கும் தீர்ப்புகளும் உங்களுக்கு சாதகமாக அமையும். தைரியம் மற்றும் வலிமை அதிகரித்துக் கொண்டே போகும். குருவின் பெயர்ச்சி பெரிய பெரிய நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு நன்மையைக் கொடுக்கும். இந்த அட்சய திருதியை தினத்தில் வீடு மற்றும் நிலத்தில் முதலீடு செய்யவுள்ளவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும்.