வாழு வாழவிடு! ப்ளூ சாட்டை மாறன் உட்பட 30 வருட திரையுலக வாழ்க்கைக்கு அஜித் கடிதம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமான அந்தஸ்து உள்ள நடிகர் என்றால் அஜித் தான். இவருக்கான ரசிகர்கள் பட்டாளமே எப்பொழுதுமே குறைந்தது இல்லை.
என்னதான் அஜித்தின் படங்கள் சமீபத்தில் பல விமர்சனங்களை கொண்டிருந்தாலும், இவரின் விடா முயற்சி தன்னம்பிக்கை எப்பொழுதுமே இன்றைய இளைஞர்களுக்கும் உத்வேகம் தான்.
நடிகர் அஜித் திரையுலகிக்கு வந்து இத்தோடு 30 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 30-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்த அஜித் ரசிகர்கள் அவரைக்கொண்டாடி பல போஸ்டர் பேனர்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
என்னதான், அஜித் இதையெல்லாம் விரும்பவில்லை என்றாலும், இன்று வரையில் இவரின் ரசிகர்கள் இவரை வெறுக்காமல் அவர் நடித்தால் மட்டும் போதும் என கொண்டாடி வருகின்றனர்.
ஒரு காலக்கட்டத்தில், கமல் ரஜினி ஆதிக்கத்தையே தகர்த்து, ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் தான் அஜித் என்றால் அது மிகையாகாது.
வாழு வாழவிடு அன்பு வேண்டுகோள்
இந்நிலையில், தன் ரசிகர்களுக்காக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதை அஜித்தின் பி.ஆர்.ஓ சுரேஷ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ரசிகர்கள் வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரு நாணயத்தின் 3 பக்கங்கள்.,
ரசிகர்களின் அன்பையும் வெறுப்பாளர்களின் வெறுப்பையும், நடுநிலையாளர்களின் சார்பற்ற கருத்துக்களையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். வாழு வாழவிடு!. அளவற்ற அன்பு எப்போதும்.. அஜித் குமார்” என அஜித் குமார் தெரிவித்து இருக்கிறார்.
A reminder to whom so ever it may concern.
— Suresh Chandra (@SureshChandraa) March 14, 2022
Unconditional love always - AK ❤️? pic.twitter.com/AM2Kh0I9Pq