லீக்கானது வலிமை பட அப்டேட்... தல அஜீத்தின் கதாபத்திரம் இதுதான்! குஷியில் ரசிகர்கள்
அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டினை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரிடமும் கேட்டு வந்த நிலையில், தற்போது குஷியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருவதோடு, போனிகபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
வலிமை என்ற பட டைட்டிலை தவிர இதுவரை படக்குழுவினர் எந்த ஒரு அப்டேட்டையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
ஆனால் அவ்வப்போது படக்குழுவினர் மற்றும் ரசிகர்களிடமிருந்து இப்படம் குறித்து சில தகவல்கள் கசிந்து வருகின்றது.
இந்த நிலையில் வலிமை படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுடன் உரையாடியபோது வலிமை படத்தில் அஜித் கேரக்டர் குறித்து கூறியுள்ளார்.
அஜீத் இதற்கு முன் நடித்திராத கேரக்டரில் இப்படத்தில் நடித்து உள்ளதாகவும் 10 முதல் 15 வயது வரை அவர் வயது குறைந்து காணப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை அதிகரித்துள்ளதாகவும் இந்த படம் நிச்சயம் தல அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருப்பத்துக்குரிய படமாக இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
அஜித் கெட்டப் மற்றும் கேரக்டர் குறித்து நடிகை சங்கீதா கூறிய நிலையில் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
