தங்க பதக்கம் வென்ற நடிகர் அஜித் மகனின் அரிய புகைப்படங்கள்
நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் தங்க பதக்கம் வாங்கிய நிலையில், அவரது அரிய புகைப்படங்களை இங்கு காணலாம்.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், பல விடயங்களில் தன்னை ஈடுபடுத்தி ரசிகர்களுக்கு உதாரணமாக இருந்து வருகின்றார்.
சமையல், தோட்டம் அமைப்பது, துப்பாக்கி சுடுதல், கார் மற்றும் பைக் ரேஸ், போட்டோ கிராபி, பைக் டூர், சைக்கிளிங் என கலக்கி வருகின்றார்.
துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இவருக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இதில் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் கலக்கி வருகின்றார்.
சென்னை அணி சார்பாக விளையாடிய ஆத்விக் தங்க பதக்கம் பெற்ற புகைப்படம் வைரலாகியது.
இதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் ஆத்விக்கின் அரிய புகைப்பட தொகுப்பை வெளியிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |