எதிர்நீச்சலில் புதிய வில்லனாக வரும் நடிகர் இலங்கையை சேர்ந்தவரா? பலரும் அறியாத உண்மை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக களமிறங்கிய நடிகர் யார் என்ற விபரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை தெரியவந்ததிலிருந்து குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார். இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
குணசேகரனாக வேல ராமமூர்த்தி களமிறங்கி 4 நாட்கள் கலக்கிய நிலையில், வேறொரு படப்பிடிப்பிற்காக சென்றதால், சீரியலின் கதையை மாற்றி கொண்டு செல்கின்றனர்.
புதிய வில்லன் என்ட்ரி
இந்நிலையில் குறித்த சீரியலில் கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் என்ற ஒரு வில்லன் அறிமுகமாகியுள்ளார்.
இவரது பெயர் ஆர்ஜே நெலு. ஜனனியை மிரட்டும் தோரணையில் களமிறங்கிய இந்த வில்லன் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
நெற்றியில் திருநீறு, வெள்ளை வேஷ்டி சட்டை, தோளில் ஒரு பேக் என பவ்யமாக இருந்தாலும் பேச்சில் தான் ஒரு வில்லன் என்பதை முதல் நாளே மிரட்டியுள்ளார்.
அதிலும் சக்தி மற்றும் ஜனனியிடம் தனது பெயரை அறிமுகம் செய்யும் போது அச்சுஅசல் உண்மையான வில்லனாகவே மாறினார்.
இவர் இலங்கை மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர். நடிகர், இயக்குனர், தொகுப்பாளர் என வலம்வரும் இவர், முதன்முறையாக இலங்கையில் சக்தி ரிவி ஒன்றில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
தற்போது இயக்குனர் திருச்செல்வம் மூலமாக கிருஷ்ணப்ப சுவாமி மெய்யப்பன் கிருஷ்ணாவாக தமிழ் ரசிகர்களின் மத்தியில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
ஒருபுறம் கோவில் திருவிழாவில் நடக்க போவது என்ன என்ற எதிர்பார்ப்பும் மற்றொரு புறம் கிருஷ்ணப்பாவால் ஜனனி என்னென்ன பிரச்சினையை சந்திக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |